களுத்துறை சிறைச்சாலையில் கடந்த 32 நாட்களில் இரண்டு சிறைக் கைதிகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 15ஆம் திகதி படுகொலை வழக்கில் சிறைவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருந்தார்.
இந்த நிலையிலேயே லுனாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் சந்தேகத்தின் பேரில் கைதாகிய 38 வயதைச் சேர்ந்த கைதியே இவ்வாறு நேற்று இரவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றார்.
குறித்த நபர் சிறைக் கூடத்தில் பாதணியை கட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் பட்டியில் கழுத்தை நெரித்துக் கொண்டு தற்கொலை செய்திருப்பதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.