கொழும்பின் சில பகுதிகளில் இன்று 12 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரையில் இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளது.
இதற்கமைய, கொழும்பு 02, கொழும்பு 03, கொழும்பு 07, 08, 09, 10 மற்றும் கொழும்பு 11 ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு 12 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளது.