போலி ஆவணங்கள் மற்றும் வீசா சமர்ப்பித்து கனடா செல்ல முயற்சித்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்த 13 இலங்கையர்களும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் டோஹா கட்டாருக்கு சென்று அங்கிருந்து கனடா செல்ல திட்டமிட்டிருந்தனர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.