web log free
January 04, 2025

பொலிஸாரை தாக்கிய ஐவர் கைது

களுத்துறை – அட்டுளுகம பிரதேசத்தில் அண்மையில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய 5 சந்தேக நபர்கள் ஒருவாரத்தின் பின் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதோடு, குறித்த சந்தேக நபர்கள் இரத்தினபுரி – பலங்கொட பிரதேசத்திலுள்ள கல்தொட்ட பல்லன்கல வனப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை பலங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd