புதிய வீதிப் போக்குவரத்து சட்டம் குறித்து பொலிஸாருடன் இன்று வெள்ளிக்கிழமை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் பேச்சு நடத்தவுள்ளது.
பஸ் பயணிக்கும் வீதிப் பிரிவிலேயே முச்சக்கர வண்டியும், மோட்டார் சைக்கிளும் பயணிக்க வேண்டும் என்கிற புதிய போக்குவரத்து முறைக்கெதிராக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், இதுகுறித்து கடும் விசனம் வெளியிட்டிருக்கும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தார்.
இதனிடையே பொலிஸாருடன் இன்று நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தை தோல்வியடையும் பட்சத்தில் வேலைநிறுத்தத்தை நடத்துவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.