web log free
January 04, 2025

பேஸ்புக்கில் மனைவியின் நிர்வாண புகைப்படங்கள்

கட்டிய மனைவியின் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவன் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தமிழ் நாட்டில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் குறித்த செயலுக்கு என்ன காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

சென்னை அயனாவரம் பழனியப்பா தெருவைச் சேர்ந்த துர்கா (28) என்பவருக்கும், சார்லஸ் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று கருத்து வேறு பாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு துர்காவிற்கு திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதி என்பவர் பழக்கமாகியுள்ளார்.

ஆரம்ப காலத்தில் இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இருவரும், திருமணம் செய்து கொண்டு, சென்னை அயனாவரத்தில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

அப்போது விஜயபாரதி, அடிக்கடி 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு துர்காவைத் துன்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் தரவில்லை என்றால் உனது ஆபாசப் புகைப்படத்தை வெளியிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த துர்கா கடந்த ஜூலை மாதம் விஜயபாரதியிடம் சண்டை போட்டுக்கொண்டு வில்லிவாக்கத்தில் உள்ள தனது அம்மாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இருப்பினும், தொலைப்பேசி மூலம், விஜயபாரதி பணம் கேட்டு, துர்காவை தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் துர்கா இதற்கு எந்த ஒரு பதிலும் கொடுக்காததால், ஒரு கட்டத்தில், துர்காவின் நிர்வாணப் புகைப்படத்தை பேஸ்புக்கில் விஜயபாரதி வெளியிட்டுள்ளார்.

இதைக் கண்டு, அதிர்ச்சியடைந்த துர்கா, கடந்த மாதம் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். துர்காவின் உறவினர் ஸ்ரீதரன் கொடுத்த புகாரின் பேரில் அயனாவரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விஜயபாரதியைத் தேடி வந்தனர்.

விஜயபாரதியைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்தபோது பலமுறை நான் வெளியூரில் உள்ளேன் என தொடர்ந்து பொய் கூறி வந்துள்ளார்.

நேற்று இவர் சென்னையில் இருப்பதை அறிந்த அயனாவரம் பொலிசார் கையும் களவுமாக பிடித்து, மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியது, பேஸ்புக்கில் நிர்வாணப் படத்தை வெளியிட்டது போன்ற குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd