ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ வழங்கியுள்ள சாட்சியம் முற்றிலும் பொய்யானது என்பதுடன் அவதூறானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்கல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, வழங்கிய சாட்சியத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பாக கூறிய விடயங்களுக்கு ஊடகங்களில் மிகப் பெரிய பிரசாரம் வழங்கப்பட்டது.
எனினும் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியத்தில் கூறப்பட்ட முற்றிலும் பொய்யானவை என்பது அவதூறானவை. ஊடகங்களில் வெளியான இந்த விடயங்களை முன்னாள் ஜனாதிபதி முற்றாக நிராகரித்துள்ளார். இது முற்றிலும் பொய் என்பதை மக்களுக்கு தயவுடன் தெரிவித்துக்கொள்றோம்
ஏதோ ஒரு வகையில் அடுத்த தினங்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆணைக்குழுவில் ஆஜராக சந்தர்ப்பம் கிடைத்தால், இந்த விடயங்கள் சம்பந்தமான உண்மைகளை தெளிவுப்படுத்த எண்ணியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.