web log free
July 04, 2025

வளர்ப்பு தந்தையால் மாணவி கர்ப்பம்

கடலூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை வளர்ப்பு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிறுப்பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோரை இழந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த சிறுமிக்கு பெரியப்பா முறைகொண்ட பிச்சைமுத்து என்பவர் அந்த சிறுமியை வளர்த்து வந்தார்.

அந்த சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிறுமி 3 மாதம் கர்ப்பமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சிறுமிக்கு கருகலைப்பு செய்ய அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த பொலிஸார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சிறுமி அவருடைய தோழியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அவருடைய தோழியின் சகோதரர் வெற்றிவேல் (29) என்பவர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து வளர்ப்பு தந்தை பிச்சமுத்துவிற்கு அச்சிறுமி கூறியதாக தெரிகிறது. ஆனால் அதனை பயன்படுத்தி அந்த சிறுமியை மிரட்டி பிச்சைமுத்துவும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதனால் இப்போது அச்சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து வெற்றிவேல் மற்றும் வளர்ப்பு தந்தை ஆகிய இருவரையும் பொலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Last modified on Monday, 21 September 2020 06:40
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd