20ஆவது அரசியலமைப்பு பற்றி தனக்கு முழுமையாக எதுவும் தெரியாது என்று மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அவர் நேற்று கருத்து தெரிவித்தபோது மேற்கொண்டவாறு கூறியுள்ளார்.
இது பற்றி மேலும் அவர் கூறியதாவது,
20ஆவது அரசியலமைப்பு பற்றி முழுமையாக எதுவும் தெரியாது. அதனை நான் ஆராய்ந்து வருகிறேன். குழு ஒன்று நியமிக்கப்பட்டு தற்போது அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 19ஆவது திருத்ததிற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டார்கள். அதேபோல் இப்புதிய அரசியலமைப்பு திருத்ததிற்கும் எதிர்ப்பு வெளியிடுவார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத தர்க்கமாகும்” என்றார்.