இந்த வாரத்தில் இருந்து அமைச்சரவை கூட்டத்தை திங்கட்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (21) பிற்பகல் 04 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூடவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக கலுவெல தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வரும் காலங்களிலும் அமைச்சரவை கூட்டம் திங்கட்கிழமைகளில் நடைபெறும். இதனையடுத்து, அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளதாக நாலக கலுவெல குறிப்பிட்டுள்ளார்.