முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சற்றுமுன் ஆஜராகியுள்ளார்.
அண்மையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆணைக்குழு முன்பாக முன்வைத்த குற்றச்சாட்டிற்கு மைத்திரி அறிக்கை ஊடாக விளக்கமளித்திருந்தார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின் அந்த விசாரணைகளைத் தடுக்க மைத்திரி பல முயற்சிகளை செய்திருந்ததாக ஹேமசிறி பெர்ணான்டோ சாட்சியத்தில் விளக்கமாக குறிப்பிட்டிருந்தார்.னன
இதுபற்றி விளக்கம் வழங்கி சாட்சியம் அளிக்கும்படி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி சிறிசேன கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவருக்கு அதற்கான சந்தர்ப்பம் இன்று அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.