சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் கொன்சியூலர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தில் பணியாற்றிவரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 27ஆம் திகதியே இந்த அலுவலகம் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவிலுள்ள இலங்கையர்கள், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அலுவலகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.