கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் 12 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் கஸினோ சூதாட்டத்தில் இவர்கள் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதாகிய சீனப்பிரஜைகளிடம் இருந்து 65 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களில் மூன்று பெண்கள் உள்ளனர்.