20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முதலாம் வாசிப்பிற்காக இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்பட்ட பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமாயின் 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டால் நீதிமன்ற செயற்பாடுகளுக்காக 3 வாரகாலம் வழங்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்பினை அடுத்தே இரண்டாம் வாசிப்பிற்காக அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.