ஹேமன் மதுக்கூர் இயக்கத்தில் மாதவன் மற்றும் அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சைலன்ஸ். இப்படத்தின் அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் அனுஷ்கா காது கேளாத, வாய் பேச முடியாத ஓவிய பெண்ணாக நடித்துள்ளார். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஷெனியல் டியோ என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கிரைம் மற்றும் திரில்லர் படமான சைலன்ஸ் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளிவந்தநிலையில், தற்போது அக்டோபர் 2 ஆம் திகதி காந்தி ஜெயந்தியன்று படம் ரிலீஸாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படம் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.