இலங்கையில் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் சில பிளாஸ்டிக் பொருட்கள் மீது தடை விதிக்கப்படவுள்ளது.
கொட்டன் பட்டன், கிருமி நாசினி அடங்கிய பிளாஸ்டிக் போத்தல், சஷே பக்கட்டுக்கள் என்பன மீது இவ்வாறு தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இவை மீது தடை விதிக்கப்படுவது உறுதி என்பதால், மாற்று உற்பத்திகளை செய்துகொள்ளும்படி உற்பத்தியாளர்களை அமைச்சர் அறிவுறுத்தியிருக்கின்றார்.
இதேவேளை அடுத்தவருடத்தில் மேலும் பல பிளாஸ்டிக் பொருட்கள் மீது தடை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.