அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் இன்று வியாழக்கிழமை ஆஜராகின்றனர்.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,, சம்பிக்க ரணவக்க மற்றும் முன்னாள் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, மங்கள சமரவீர ஆகியோர் இந்த ஆணைக்குழு முன் இன்று ஆஜராகும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.