web log free
September 03, 2025

கொரோனாவிடம் எஸ்கேப் ஆன கேப்டன்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு நேற்று திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கே நடந்த பரிசோதனையில் விஜயகாந்திற்கு லேசான கொரோனா நோய் அறிகுறிகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு உடல்நல கோளாறு காரணமாக மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்கு செல்வது வழக்கம்.

அந்தவகையில் அவர் மருத்துவனைக்கு சென்றபோது அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும், தற்போது சரிசெய்ப்பட்டதாகவும், தற்போது விஜயகாந்த் பூரண நலத்துடன் இருப்பதாகவும் கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இந்த செய்தி தேமுதிக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd