முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை நடத்துகின்ற ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்றும் ஆஜராகியுள்ளார்.
இவர் இந்த ஆணைக்குழு முன்பாக ஆஜராகின்ற 4ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதன்படி இன்று காலை 10.30க்கு அவர் ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகின்றார்.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இதற்கு முன் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் அளித்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையாளராக அங்கு வந்துசென்றமை குறிப்பிடத்தக்கது