தீப்பரவலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பலின் மாலுமியை விளக்கமறியலில் வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னதாக மாலுமியை விளக்கமறியலில் வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், குறித்த கோரிக்கையை நிறைவேற்றும் அதிகாரம் மேல் நீதிமன்றுக்கே உள்ளதாக நீதவான் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, மாலுமியின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தின் உத்தரவு இன்றி வெளிநாட்டுக்கு செல்ல முடியாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.