web log free
October 18, 2024

5 பொலிஸார் தலைமறைவு!

காலி - ரத்கம பகுதியில் வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் பொலிஸ் உத்தியோகத்தர்கனள் பேர், தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, சந்தேக நபர்பளை தேடி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் வலை விரித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தற்போது மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட காலி - ரத்கம பகுதியை சேர்த்த வர்த்தகர்களுடையது, என சந்தேகிக்கப்படும் ஆடைகள் மற்றும் அலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

மாத்தறை - வெல்லமடம பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் வைத்து, குறித்த பொருட்கள் புதைக்கப்பட்ட நிலையில், குற்ற புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, தென் மாகாண விஷேட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் விராஜ் மதுஷான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்றைய தினம் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.