இன்னும் 06 மாதங்களிற்குள் புதிய அரசியலமைப்பிற்கான அடிப்படை வரைபை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை பகல் நடந்த ஊடக சந்திப்பில் அவர் இ்நத தகவலை அவர் வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த 20ஆவது புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரணியிலுள்ள பலரும் ஆதரவளிப்பதற்கு விருப்பம் வெளியிட்டிருப்பதாகவும் கூறினார்.
அத்துடன் இந்த அரசியலமைப்புத் திருத்தமானது தற்காலிகமே. 42 வருடங்களின் பின் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் தயராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.