எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில், மற்றுமொரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் சுஜீவ சேனசிங்க, அரசியலிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், தோல்வியைத் தழுவிக்கொண்டார்.
இந்நிலையில், தன்னுடைய வர்த்தகத்தை மேம்படுத்தவும் கல்வியை தொடரவும், அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.