தேங்காய் சுற்றளவு குறித்து வெளியான வர்த்தமானி மற்றும் சட்டத்தை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்த 56 விற்பனையாளர்கள் மீது வழக்கு தொடரப்படவுள்ளது.
சுற்றளவை அடிப்படையாக வைத்து தேங்காய் விலையை நிர்ணயிக்க அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது.
இதனை மீறி நடக்கும் வர்த்தகர்கள் குறித்து விசாரணை நடத்த சோதனைகளும் நடத்தப்படுகின்றன.