கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக தொடர் புகார் எழுந்து வந்துள்ளது. அதனை அடுத்து போலீசார் அந்த வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தக்கலை டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான பொலிஸார் அந்த வீட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது இரண்டு அறையில் சிறுமிகளுடன் இருந்த ஆண்கள் இரண்டு பேர் தப்பி ஓட முயன்றுள்ளனர். அவர்களை பொலிஸார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் ஒருவர் வீரவ நல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவல் ஆய்வாளரின் கணவரான குளச்சல் பகுதியை சேர்ந்த ராஜ்மோகன் என்பதும் மற்றொருவர் தக்கலை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுனில் என்பதும் தெரிய வந்தது.
மேலும் அங்கிருந்த சிறுமிகள் மற்றும் பெண் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த லதா என்பவர் தனது கல்லூரி, +2,10 ஆம் வகுப்பு படிக்கும் மகள்கள் மற்றும் இளைய மகளின் தோழி ஆகியோரிடம் ஆசை வார்த்தைகளை கூறி லதா பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து பொலிஸார் அந்த நான்கு சிறுமிகளையும் மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் லதா, பெண் ஆய்வாளரின் கணவர் ராஜ்மோகன் மற்றும் கூலித் தொழிலாளி சுனில் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.