எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுவ பிரதேசத்தில் நேற்று இரவு நடைபெற்ற எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பங்குபற்றிய நிகழ்வின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரணை செய்த பொலிஸார் இரண்டு சந்தேக நபர்களை இன்று முற்பகலில் கைது செய்துள்ளனர்.