மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று காலை ஆஜராகிய மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி சர்ச்சைக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் வைத்து தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவரை மிரட்டிய குற்றச்சாட்டில் விசாரணைக்காக ஆஜராகும்படி அண்மையில் சுமனரத்ன தேரருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
இதற்கமைய அவர் இன்று தனது சட்டத்தரணியுடன் மன்றில் ஆஜராகினார்.
அவர் ஒரு முஸ்லிம் சட்டத்தரணியூடாக மன்றில் ஆஜராகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட எச்சரிக்கையின்பின் அவருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.