web log free
December 07, 2025

SPB-யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

 

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் .

கொரோனா தொற்று ஏற்பட்டதால், MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த பாடகர் SPB, உடல்நல குறைவு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.

இவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

SPB தனது திரைப்பயணத்தில் சுமார் 42,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், அவர் தான் பாடும் பாடல்களுக்கு எப்போது அதிக சம்பளம் வாங்கியதில்லை என வெளிப்படையாகவும் அறிவித்துள்ளார்.

சுமார் 50 ஆண்டுகள் கலைத்துறையில் இருந்தும் வெறும் ரூ.120 கோடி மட்டுமே தனது சொத்தாக சேர்த்து வைத்துள்ளாராம் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.

தற்போது உள்ள முன்னணி கதாநாயகர்களின் ஒரே படத்தின் சம்பளமே கிட்டத்தட்ட 50 கோடிக்கும் மேல் இருக்கும் நிலையில், கடந்த 50 ஆண்டுகள் சினிமாவில் இருந்தும் இவ்வளவு தானா SPB-யின் சொத்து மதிப்பு என்பது பலராலும் சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd