மலையாள சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் எருமை மாடுகள் வாங்கி வளர்த்து வரும் சம்பவம் நடந்துள்ளது.
கொரோனா ஊரடங்கினாள் பலர் வேலை இழந்து, சாப்பாட்டிற்கே சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மஞ்சு பிள்ளை, இவர் பல்வேறு சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், சீரியல்களிலும் நடிகையாக நடித்துள்ளார்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் இவருக்கும் பட வாய்ப்புகள் இல்லை.
இதனால் அன்றாடம் செலவிற்கே மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஏதாவது தொழில் தொடங்கலாம் என நினைத்த மஞ்சு பிள்ளை எருமை மாடுகளை வாங்கி பால் வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளார்.
இதனையடுத்து ஹரியானாவில் இருந்து தரமான எருமை மாடுகளை இறக்குமதி செய்து சுமார் 20 எருமை மாடுகளுக்கு மேல் வைத்து தற்போது பிசினஸ் செய்து வருகிறாராம்.
சினிமாவில் வரும் வருமானத்தை விட இதில் நல்ல வருமானம் வருகிறது என்பதால் இந்தத் தொழிலையே தொடர்ந்து செய்யலாம் என அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.