யாழ்.நீர்வேலி பகுதியில் தனுரொக்கின் நண்பன் மீது வன்முறைக் கும்பல் ஒன்று சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.
மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வாள்வெட்டு சம்பவம் நேற்று (30) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பு.சிவா (30) அவரது தயார் ரேணுகா (50) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர்.
3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாள்கள், கம்பிகள் மற்றும் சில கூரிய ஆயூதங்களை கொண்டே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.