மழைக் காலங்களில் எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுகத் சமரவீர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பதியில் ஆறாயிரத்து 96 பேருக்கு இதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் அதிகமானோர் இரத்தினபுரி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை ஆயிரத்து 341 பேருக்கு இந்த அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இதுவரை இந்த நோயின் அறிகுறிகள் இருந்த 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரம், கேகாலை, களுத்துறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.