புங்குடுதீவில் பூசகர் ஒருவர் குளக்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு சடலத்தினை அங்கு கொண்டுவந்து போட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
ஊரதீவு சிவன் ஆலய குளக்கரையிலேயே அவரது சடலம் இன்று(சனிக்கிழமை) அதிகாலை கண்டறியப்பட்டது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகர் ரூபன் சர்மா என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.