இலங்கையில் ஒவ்வொரு இரண்டு மணிநேரத்திற்கும் ஒரு சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கண்டியில் நேற்று நடந்த சிறுவர்தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வு 4 மணிநேரம் நடைபெற்றாலும் இந்த மணிநேரங்களிலும் இரண்டு சிறுவர்கள் பாரதூர துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருக்கலாம். இதுதான் இந்த தீவிலுள்ள மிகப்பெரிய கொடுமை என்றும் அவர் குறிப்பிட்டார்.