திவுலபிட்டியவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளரான பெண்ணின், 16 வயது மகளுக்கு கொரோனா உறுதி
திவுலபிட்டிய பகுதியிலுள்ள பெண்ணுக்கு கொரோனா தொற்று எவ்வாறு பரவியது என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்
- மினுவாங்கொடை, திவுலப்பிட்டியில் ஆகிய பகுதிகளில் இருந்து பணிக்குச் செல்லும், விடுமுறையில் . இருக்கும் முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் அனைவரும் மறு அறிவித்தல் வரும் வரை, பணிக்குச் செல்லவேண்டாம் என, இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
- கம்பஹா மாவட் பாடசாலைகளுக்கு ஒருவாரம் பூட்ட
- மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை பார்வையிடத் தடை
- சகல பாடசாலைகளுக்கும் நாளை முதல் இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை நாளை ஆரம்பம
- கடந்த காலங்களைப் போல ஒத்துழைப்பு நல்குமாறு சுகாதார அமைச்சர் பவித்திரா தேவி வன்னியரச்சி கோரிக்கை
- களனி பல்கலைக்கழகம் மற்றும் கம்பஹா விக்கிரமஆராச்சி ஆயுர்வேத வித்தியாலயம் மற்றும் நைவல உயர் தொழிநுட்ப நிறுவனம் என்பவற்றை ஒரு வாரம் பூட்டு
- மினுவாங்கொடை, திவுலப்பிட்டியில் ஆகிய பகுதிகளில் இருந்து பணிக்குச் செல்லும், விடுமுறையில் இருக்கும் முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் அனைவரும் மறு அறிவித்தல் வரும் வரை, பணிக்குச் செல்லவேண்டாம் என இராணுவத் தளபதி அறிவுறுத்தல்
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் சில மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.