web log free
February 08, 2026

ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் - ருவன்

2015 ஆம் ஆண்டில் வென்றெடுத்த ஊடக சுதந்திரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக அமைச்சர் ருவன் விஜயவர்த்தன உறுதியளித்துள்ளார்.

ஊடக அரசியல் அனுபவங்களை அடிப்படையாக கொண்டு ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஊடகவியலாளர்களின் தராதரத்தை மேம்படுத்துவது பற்றிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரச ஊடகங்களில் நிலவும் நெருக்கடிகளை தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்க்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமைச்சரவை அந்தஸ்தற்ற ஊடக அமைச்சராக கடமைகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர் ருவன் விஜயவர்த்தன ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd