நாடாளுமன்றத்தில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ உறுப்பினர்களை கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற தாக்குதல் பற்றிய விசாரணை குறித்து இந்த சந்திப்பில் கர்தினால் தெளிவுபடுத்த உள்ளார் என்றும் கூறப்படுகிறது.