களனி பல்கலைக்கழகம், விக்கிரமாராச்சி ஆயுர்வேத நிலையம், யக்கல மற்றும் நய்வல உயர் தொழிநுட்ப நிறுவனம் ஆகியவற்றில் கல்வி கற்கும் மாணவர்கள் தொடர்ந்தும் தமது வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
களனி பல்கலைக்கழகம் மற்றும் கம்பஹா யக்கல விக்ரமஹரச்சி தனியார் கல்வியகம் என்பன நேற்று முதல் ஒருவார காலத்திற்கு மூடப்பட்டுள்ளன.
அத்துடன், பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் விடுதியிலியிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.