இங்கிலாந்து நாட்டில் மாணவி ஒருவர் தன் தோழிகளுடன் சேர்ந்து மதுபானம் அருந்திய நிலையில், போதையில் வாஷிங்மெஷினில் நுழைந்து சிக்கி கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சேர்ந்த 21 வயதான பல்கலைக்கழக மாணவி ரோஸி என்பவர் தனது தோழிகளுடன் சேர்ந்து மதுபானம் அருந்தியுள்ளார்.
மது போதையால் அந்த இளம்பெண் விளையாட்டாக வாஷிங்மெஷினில் புகுந்துள்ளார். இதனையடுத்து அவரால் வெளியே வரமுடியாமல் சிக்கிக்கொண்டு சிரமப்பட்டுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் அந்தப் பெண்ணை வாஷிங்மெஷினிற்குள் இருந்து பாதுகாப்பாக மீட்டனர்.
ஆபத்தில் இருந்து மீண்ட மாணவி ரோஸி, இனிமேல் இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபட முயற்சிக்கமாட்டேன் என்று தெரிவித்தார்.
— TheTabTikToks (@TikTab) October 2, 2020