web log free
May 02, 2026

மீண்டும் ஆஜராகுமாறு மைத்திரிக்கு பணிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (05) வாக்கு மூலம் வழங்க ஆஜராகியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுமார் 7 மணி நேர வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

அத்துடன், அவரை மீண்டும் 12 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளைய தினம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd