கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகளை நடாத்துவது குறித்து கல்வி அமைச்சு நாளை இறுதித் தீர்மானத்தை எடுக்குமென அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கொழும்பில் இன்று காலை நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், அடுத்துவரும் 48 மணித்தியாலங்கள் மிகவும் முக்கியமான காலப்பகுதியாக இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.