முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க , ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.
வாக்குமூலமளிக்க வருமாறு அவருக்கு கடந்த 22ஆம் திகதி ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று(06) முன்னிலையான ரணில் விக்கிரமசிங்க ஒன்றரை மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அவரை எதிர்வரும் 13ஆம் திகதி ஆணைக்குழுவில் மீண்டும்ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.