தீவிரவாத்துடன் நேரடியான தொடர்புகள் இல்லாத காரணத்தினாலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவர் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் புதிதாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.