பரீட்சை சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவரையும் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக ஒன்லைன் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பரீட்சைத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. .
பரீட்சை சான்றிதழ்களை ஒன்லைன் முறை மூலம் கோரலாம் மற்றும் பெறலாம் என்று பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் சனத் பி.புஜிதா தெரிவித்துள்ளார்.
அண்மையில் சமூக தொற்றுக்கு உள்ளான கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து , புதிய கொரோனா நோயாளர்கள் கணிசமாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலே கொவிட் -19 தடுப்பு நடவடிக்கையாக பரீட்சைகள் திணைக்களம் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்