நேற்றிரவு (06) மேலும் 124 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில், நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4,252 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 10 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுளளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.