web log free
January 07, 2025

இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்கள் இரண்டிற்கு கொரோனா வைரஸ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின்  Manchester  Metro மற்றும் Sheffield ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு கொரோனா வைரஸ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Manchester  பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சுமார் ஆயிரம் மாணவர்கள் மற்றும்  பணியாளர்கள்  20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  Manchester   நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்  சுமார் ஆயிரத்து 700 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் கற்றல்  நடவடிக்கைகள் யாவும் இணையத்தளம் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எதிர்வரும்   மூன்று வாரங்கள் கடுமையானதாக அமையும்  Manchester   சுகாதார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன் காரணமாக எதிர்வரும் 30 ஆம் திகதி வரை  இணையத்தளமூடாக கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை Sheffield பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய கற்கை நெறிகள் இணையதளமூடாக  இடம்பெறுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Manchester  Metro  பல்கலைக்கழகத்திற்கு இரண்டாவது தடவையாக  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சர்வதேச ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3 லட்சத்து  5 ஆயிரத்து  384 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்  ஒரு லட்சத்து  53 ஆயிரத்து  925 உயிரிழப்புக்கள பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இவர்களுள் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிகளவான தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd