நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்தவொரு தீர்மானமும் அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.
எனவே மக்கள் அநாவசியமான அச்சத்தில் அத்தியாவசியப் பொருட்களை முண்டியடித்துச் சேர்க்க வேண்டாம் எனவும் அமைச்சர் கூறினார்.
இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு இன்று கருத்து வெளியிட்ட அமைச்சர்,
மக்களின் அச்ச உணர்வால் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் பல பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.