கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் (10) இரவு 10 மணி முதல் 11 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனடிப்படையில், நாளை மறுதினம் இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் அதேவேளை, கொழும்பு 01 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படுமென சபை குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு மாநகர நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத்தை விஸ்தரிக்கும் நோக்கிலான முதலீட்டு திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் கட்டமைப்பின் திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.