கொழும்பு ரிஜ்வே ஹார்யா சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மினுவங்கொடை பகுதியை சேர்ந்த குறித்த குழந்தை காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த குழந்தை தற்போது ஐ.டி.எச்க்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.