கொழும்பு ரிஜ்வே ஹார்யா சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை ஒன்றின் தந்தைக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
5 மாத வயதுடைய குறித்த குழந்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் தற்காலிகமாக கொடிகாவத்தை பிரதேசத்தில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் கண்டி பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இருவரும் வைத்தியசாலைக்கு கடந்த தினம் வருகை தந்த போது அவர்களிடம் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குழந்தைக்கோ அல்லது தாய்க்கோ இதுவரையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.