ஊரடங்கு உத்தரவினை மீறி செயற்பட்ட 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றைய தினத்தில் (08) மாத்திரம் ஊரடங்கு உத்தரவை மீறிய 11 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும், 19 மோட்டார் சைக்கிள்கள், 3 முச்சக்கரவண்டிகள், லொறி ஒன்றும் மற்றும் 23 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.